முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இன்பம்

கட்டுப்பாடற்ற வழி தவறி பெறக்கூடிய இன்பங்கள் குறுகிய காலம்தான் நிற்கும்.   அத்தகைய சிற்றின்பங்களினால் வரும் துன்பங்கள் நீண்ட காலம் நீடிக்கும். எனவே துன்பமமற்ற நிலையான இன்பத்தை பெற வேண்டுமெனில்,  எப்போதும் தனது மனதையும் புலன்களையும், கட்டுபாட்டோடு வழிதவறாமல் நடத்தல் வேண்டும். இரவு வணக்கம்

வெற்றி

நம் மன அழுத்தம் உருவாகுவதற்கு மற்றவர்களை காரணமாக எண்ணுகிறோம். நாம் எதிர்பார்ப்பது நமக்கு கிடைக்காமல் போகிறபோது தான் நமக்கு மன அழுத்தம் உண்டாகிறது. எதிர்பார்ப்பெதுவுமின்றி, அதனை அடைய முயற்ச்சி செய்தால், நிச்சயம் வெற்றி அடைந்து மன அழுத்தமின்றி வாழலாம். மாலை வணக்கம்

புகழ்ச்சி

காத்தாடி நமக்கு ஒரு நல்ல படிப்பினையை கற்றுக் கொடுக்கிறது. தொடர்ந்து சரியான திசையில் உயர பறக்க வேண்டுமெனில், நூலோடு இணைந்து கட்டுபாட்டில் இருத்தல் அவசியம். அதேபோல் மனிதன் எவ்வளவுதான் புகழின் உச்சிக்கு சென்றாலும் தாம் ஏறி வந்த பாதைகளையும், உதவியவர்களையும் தொடர்ந்து நினைவில் வைத்து கொள்வது அவசியம். அத்தகைய செயல், மனிதனை புகழின் உச்சியில் நிலைத்திருக்க செய்யும். மாலை வணக்கம்

எண்ணங்கள்

நம் எண்ணங்களின் தரத்தையும், புரிதலின் ஆழத்தையும் உயர்த்த முயற்சிக்க வேண்டும். அவையிரண்டும் உயரும்போது, நம் வாழ்க்கை தரமும் தானாக உயரும். காலை வணக்கம்

வெற்றி

நாம் ஒரு விஷயத்தை மற்றவரிடம் சொல்லும் போது, சொல்லும் விதம், சைகை இவைகள் சொல்லும் விஷயத்தைவிட முக்கியமானதாகும். இதை உணர்ந்தவர்கள்,   தங்களுடைய குரலினை சூழ்நிலைக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் பேசி வாழ்கையில் வெற்றி பெற முடியும். மாலை வணக்கம்

நன்றி

பிறர் நமக்கு செய்த உதவிக்காக, அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் நன்றி சொல்ல பழக வேண்டும். அத்தகைய மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொண்டால், நாமும் மகிழ்ந்து, உதவியவர்களையும் மகிழ்விக்கலாம். மாலை வணக்கம்

ஜோதிடம் (தமிழில்) | இலவச பதிவிறக்கம்

ஜோ திடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள். சோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை.  

அம்மை தழும்பு நீங்க இயற்கை வைத்தியம் என்ன?

கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, அரைத்து தழும்பு உள்ள இடத்தில் அடிக்கடி தடவி வந்தால் தழும்பு நீங்கும். அம்மை தழும்பு நீக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.

உளுஜி தியானத்தில் முதல் நிலையை கற்றுக் கொடுக்க முடியுமா?

உளுஜி தியானத்தில் பல நிலைகள் உள்ளது. உளுஜி தியானத்தில் முதல் நிலை "சுய ஆசீர்வாத தியானம்" ஆகும். சுய ஆசீர்வாத தியானம் செய்தால் ஏற்படும் நன்மைகள் என்ன?

குதிகால் வலிக்கு இயற்கை வைத்தியம் என்ன ?

குதிகால் வலிக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம் இரண்டு. 1. உடலில் உப்பின் அளவு சமநிலை குறைவது. 2. உள்ளங்காலில் வழியாக உடலின் சூடு வெளியேறுவது. உடலுக்கு உப்பு மிகவும் அவசியம், ஆனால் ஆங்கில மருத்துவர்கள், உப்பு சாப்பிட்டால் BP வரும் என்று தவறான கருத்தை உலகில் பிரச்சாரம் செய்து, பலரை நோயாளியாக்கி,. அதற்கு மருந்து கொடுத்து வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைக்கு அடிமையாக்குகிறார்கள்.

ஜிம், யோகா எது நல்லது?

ஜிம்மில் உடலுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள். யோகாவில் உடலுக்கும், மனதிற்கும், புத்திக்கும், உயிருக்கும், ஆன்மாவுக்கும், மூச்சுக்கும் பயிற்சி அளிக்கிறார்கள். இளம் வயதில் அதிகமாக ஜிம்மில் பயிற்சி செய்தவர்கள், வயதான பிறகு, உடல்நடுக்கம், உடலில் சோர்வு, வயதான தோற்றம் ஏற்படுகிறது. இளம் வயதில் அதிகமாக யோகா செய்தவர்களுக்கு வயதான பிறகு, உடல் ஆரோக்கியம், தெம்பு, இளமையான தோற்றம் ஏற்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால்,

மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு தகவல்கள்

தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?* ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?
சத்திய சோதனை ( The Story of my Experiments with Truth ) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

அபாயம் இல்லை தொடு

அறிவியல் தொடர்பான விஷயங்களை எளிய நடையில், யாரையும் பயமுறுத்தாமல், விளக்கமாக எடுத்துச் சொல்கிற புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நிறைய அறிவியல் தமிழ் நூல்கள் வெளிவரவிருக்கின்றன. அந்த வரிசையில் முதன்முதலாஇப்போது வெளி வந்திருக்கிறது மின்சாரம் பற்றிய இந்தப் புத்தகம். நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட எத்தனையோ விஷயங்களில் ஒன்று மின்சாரம். ஆனால் அது பற்றி நமக்குத் தெரிகிற தகவல்களோ மிக மிக சொற்பம்தான்.

வ உ சி முற்போக்கு இயங்களின் முன்னோடி

தலைப்பு வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி ஆசிரியர் நா. வானமாமலை பதிப்பகம் மக்கள் வெளியீடு பதிப்பிடம் சென்னை பதிப்பு முதல் பதிப்பு பிப்ரவரி 1980 மறு அச்சு ஏப்ரல் 1999 மூலம் pdf பக்கங்கள் 54 கோப்பளவு 9.73 MB (பதிவிறக்குக) பகுப்பு எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் 👉இலவச பதிவிறக்கம் (Free Download)

பாரதியும் உலகமும் | பெ. தூரன்

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. 👉இலவச பதிவிறக்கம் (Free Download)

திருமலை திருப்பதி காலண்டர் 2020

  திருமலை திருப்பதி காலண்டர் 2020 👉இலவச பதிவிறக்கம் (Free Download)

அக்னிச் சிறகுகள் (அப்துல் கலாம்) ஒலிப்புத்தகம் - வைரமுத்து குரலில்

எழுத்தாளர் : Dr. A.P.J. Abdul Kalam வகை              :  சுயசரிதை குரல்                :  கவிஞர் வைரமுத்து அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இளமைக் காலம், உயர் படிப்பு, விமானம் தான் கனவு என்று இருந்து விதி வசத்தால் மாறி விஞ்ஞானி ஆனது மற்றும் அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கை வரலாறாக தனது சக ஊழியர் அருண் திவாரி உதவியுடன் “அக்னிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.  

அப்துல் கலாம் ஒரு கனவின் வரலாறு

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ( அக்டோபர் 15 , 1931 - சூலை 27 , 2015 ) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.  

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!

இத்தீபாவளி திருநாள், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி, ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குகிறது!   எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
Advertisement