முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!


இத்தீபாவளி திருநாள், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி, ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குகிறது!
 
எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

அனைவரும் இன்று பசுமை பட்டாசுகளை மட்டும் உபயோகித்து காற்று மாசு படுதலை குறைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொல்லப்படுகிறது!
 
பசுமை பட்டாசு என்றால் என்ன?
பசுமை பட்டாசு' என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 'நீரி'யின் (NEERI) கண்டுபிடிப்பு.
இது, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் அரசு நிறுவனம்.
பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும் பசுமை பட்டாசு, வெடிக்கும்போது குறைவாகவே மாசுபடுத்தும்.





பசுமை பட்டாசு என்பது எப்படி இருக்கும்?
பசுமை பாட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும்.
வெடிக்கும்போது சப்தம் எழுப்பும், ஆனால் வெளியிடும் மாசு குறைவாக இருக்கும்.
"பசுமை பட்டாசுகள், சாதாரண பட்டாசுகள் வெளியிடுவதை விட சுமார் 40-50% வரை குறைவாகவே மாசை வெளியிடும்.
ஆனால், முற்றிலும் பாதுகாப்பானது என்றோ, பாதிப்பே ஏற்படுத்தாதவை என்றோ கூறிவிடமுடியாது!"

இந்த புதிய ரக பட்டாசுகளை வெடித்தாலும் நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்கள் வெளியேறும்.
பசுமை பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை.
அதற்கான புதிய ரசாயன சேர்க்கை சூத்திரத்தை 'நீரி' உருவாக்கியுள்ளது.
பசுமை பட்டாசுகளில் எத்தனை வகைகள் உள்ளன?
பாரம்பரிய பட்டாசுகளில் இருந்து மாறுபட்ட பசுமை பட்டாசுகளை 'நீரி' நான்கு வைகைகளில் தயாரித்துள்ளது.
  • தண்ணீரை உருவாக்கும் பட்டாசுகள்: இந்த வகை பசுமை பட்டாசுகள் வெடித்த பிறகு கரியாக மாறாமல் நீர்த்துளிகளாக உருமாறிவிடும். அதில் சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் கரைந்துவிடும். இந்த வகை பட்டாசுக்கு 'வாட்டர் ரிலீசர்' என்று 'நீரி' பெயரிட்டுள்ளது. மாசை குறைக்கும் முக்கியமான காரணியாக தண்ணீர் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் பல இடங்களில் மாசு அளவு அதிகரித்திருந்த சமயத்தில் மாசு அளவை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் தெளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

  • கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களை குறைவாக வெளியிடுகிறவை: இந்த வகை பசுமை பட்டாசுகளுக்கு STAR பசுமை பட்டாசு என்று'நீரி' பெயரிட்டுள்ளது. அதாவது Safe thermite cracker என்பதன் சுருக்கமாக STAR என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாசில், ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட பொருட்கள் (Oxidizing Agent) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பசுமை பட்டாசுகளை வெடிக்கும்போது, கந்தகம் மற்றும் நைட்ரஜன் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு சிறப்பு வகை வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

  • அலுமினியம் குறைவாக பயன்படுத்தப்படுகிறவை: சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது இந்த வகை பட்டாசில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு SAFAL (Safe Minimal Aluminum) என்ற பெயரிடப்பட்டுள்ளது.

  • அரோமா பட்டாசு: இந்த வகை பட்டாசுகளை வெடிக்கும்போது தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதோடு, நறுமணமும் வெளியாகும்.


தித்திக்கும் தீபாவளித் திருநாளில், அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்!

கருத்துகள்

Advertisement