முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அக்னிச் சிறகுகள் (அப்துல் கலாம்) ஒலிப்புத்தகம் - வைரமுத்து குரலில்

எழுத்தாளர் : Dr. A.P.J. Abdul Kalam
வகை              :  சுயசரிதை
குரல்                :  கவிஞர் வைரமுத்து

அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இளமைக் காலம், உயர் படிப்பு, விமானம் தான் கனவு என்று இருந்து விதி வசத்தால் மாறி விஞ்ஞானி ஆனது மற்றும் அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கை வரலாறாக தனது சக ஊழியர் அருண் திவாரி உதவியுடன் “அக்னிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.

 

புத்தகம் எப்படி இருக்கிறது?

புத்தகம் படிக்க எளிமையாக இருக்கிறது என்று கூற முடியாது. காரணம், நமக்கு பல விஷயங்கள் புரியாதது தான் ஆனால், துவக்க காலத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம் / கொள்ள வேண்டும்.

அதோடு இன்னும் செயற்கைக்கோள், ஏவுகணை எல்லாம் மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் செயல், மக்கள் பசியால் சாகும் போது இதெல்லாம் அவசியமா என்று கேட்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். தடுக்க வேண்டியது ஊழல் தானே தவிர இது போல தொழில் நுட்பங்கள் அல்ல.

நம் நாட்டின் பாதுகாப்பின் பின்னால் இந்த ஏவுகணைகளின் பயன்பாடும், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வசதியின் பின்பும் இது போல ஒரு செயற்கைக் கோளின் பணியும் உள்ளது என்பதை உணர வேண்டும்.

அப்துல் கலாம் ஐயா! தங்களால் இந்தியா பெருமையடைந்தது, தமிழர்கள் பெருமையடைந்தோம். தங்களின் உழைப்பை, நாட்டிற்கு தாங்கள் ஆற்றிய நற்பணியை இந்த உலகம் உள்ளவரை நினைவு கூறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

👉இலவச பதிவிறக்கம் (Free Download)

கருத்துகள்

Advertisement