உளுஜி தியானத்தில் பல நிலைகள் உள்ளது.
உளுஜி தியானத்தில் முதல் நிலை "சுய ஆசீர்வாத தியானம்" ஆகும்.
சுய ஆசீர்வாத தியானம் செய்தால் ஏற்படும் நன்மைகள் என்ன?
1. நினைத்தது நடக்கும்.
2. உடலில் பலம் அதிகரிக்கும், சக்தி கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், மேலும் உடல் தன்னைத்தானே குணப்படுத்தும்.
3. மனம் அடங்கும், ஒரு நிலைப்படும், சாந்தி அடையும், சமாதானம் அடையும்.
சுய ஆசீர்வாத தியானம் செய்வது எப்படி?
1. சுகாசனம் , சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர வேண்டும்.
2. கண்கள் மூடிய நிலையில் உள்ளங்கைகளை மேல்நோக்கி வானத்தைப் பார்த்தவாறு கால் மூட்டுக்கு அருகிலுள்ள தொடைப்பகுதியில் வைக்கவும்.
3. மூச்சு காற்று உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் 30 எண்ணிக்கை கவனிக்கவும். நீங்களாக இழுக்கக் கூடாது விடக்கூடாது. தானாக உள்ளே சென்று வெளியே வருவதை மட்டுமே கவனிக்க வேண்டும்.
4. மூச்சு காற்று உள்ளே செல்வதை மட்டும் 30 எண்ணிக்கை கவனிக்கவும்.
5. முதல் முறை மூச்சுக் காற்று உள்ளே செல்லும் பொழுது உள்ளங்கையை கவனிக்கவும். இரண்டாவது முறை மூச்சுக் காற்று உள்ளே செல்லும் பொழுது புருவ மத்தியை கவனிக்கவும். மூன்றாவது முறை மூச்சு காற்று உள்ளே செல்லும் பொழுது உச்சந்தலையை கவனிக்கவும். இப்படி 30 சுற்று செய்ய வேண்டும்.
6. வலது உள்ளங்கையை மெதுவாக எடுத்துச் சென்று உச்சந்தலையில் வைக்கவும். பிறகு இடது உள்ளங்கையை மெதுவாக எடுத்துச் சென்று வலது உள்ளங்கை மேல் வைக்கவும். முடிந்தால் தலைக்குமேல் வைக்காமல் தலைக்கும் கைக்கும் ஒரு இன்ச் இடைவெளி இருக்குமாறு ஆகாயத்தில் வைப்பது சிறந்தது.
7. உங்கள் முகத்தை உங்கள் மனக்கண்ணால் காட்சியாக கொண்டு வாருங்கள். காட்சியாக கொண்டு வர முடியாதவர்கள். இந்த தியானம் ஆரம்பிப்பதற்கு முன்பாக கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
8. உங்கள் முகத்தை நீங்களே நினைத்து உங்களை நீங்களே ஆசீர்வாதம் செய்து கொள்ளுங்கள்.
9. இப்பொழுது உங்கள் நேர்மையான கோரிக்கைகளை பிரபஞ்சத்திடம் அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்திடம் பதிவு செய்து கொள்ளுங்கள். கோரிக்கைகள் பதிவு செய்யும் பொழுது திட மனதுடனும் நம்பிக்கையுடனும் முழு ஈடுபாட்டுடனும் உணர்வு ரீதியாக பதிவு செய்ய வேண்டும். இப்படி பதிவு செய்தால் அது வாழ்க்கையில் கண்டிப்பாக நடைபெறும்.
10. மீண்டும் உங்கள் முகத்தை மனக்கண்ணால் கொண்டுவந்து உங்களுக்கு நீங்களே ஆசீர்வாதம் செய்து கொள்ளுங்கள்.
11. இரு கைகளையும் பிரிக்காமல் மெதுவாக எடுத்து வந்து இரு மார்புக்கும் இடைப்பட்ட பகுதியாகிய அனாஹத சக்கரத்தில் வைக்கவும்.
12. அனாகத சக்கரத்தில் மனதை வைத்து 60 முறை மூச்சுக்காற்று உள்ளே செல்வதை கவனிக்கவும். மார்புப் பகுதி மெதுவாக விரிந்து சுருங்குவதை கவனிக்கவும்.
13. இரு கைகளை மெதுவாக உரசவும். கண்களுக்கு மேல் மெதுவாக ஒத்தடம் கொடுக்கவும். முதலில் உள்ளங்கையில் பார்வையை திறக்கவும்.
14. இந்த தியானத்தை தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் செய்தால் மிக மிக மிக சிறப்பு.
15. பகலில் எந்த நேரமும் செய்யலாம், சாப்பிட்ட பிறகும் செய்யலாம், சாப்பிடுவதற்கு முன்னாலும் செய்யலாம், அனைத்து வயதினரும் செய்யலாம், கர்ப்பிணி பெண்கள் செய்யலாம், மாதவிடாய் சமயத்திலும் செய்யலாம்.
நண்பர்களே, உளுஜியின் "சுய ஆசீர்வாத தியானம்" செய்யுங்கள். பாதுகாப்பாக வாழுங்கள்.
நன்றி : வேதா ஜி
கருத்துகள்
கருத்துரையிடுக