கட்டுப்பாடற்ற வழி தவறி பெறக்கூடிய இன்பங்கள் குறுகிய காலம்தான் நிற்கும். அத்தகைய சிற்றின்பங்களினால் வரும் துன்பங்கள் நீண்ட காலம் நீடிக்கும். எனவே துன்பமமற்ற நிலையான இன்பத்தை பெற வேண்டுமெனில், எப்போதும் தனது மனதையும் புலன்களையும், கட்டுபாட்டோடு வழிதவறாமல் நடத்தல் வேண்டும். இரவு வணக்கம்
நம் மன அழுத்தம் உருவாகுவதற்கு மற்றவர்களை காரணமாக எண்ணுகிறோம். நாம் எதிர்பார்ப்பது நமக்கு கிடைக்காமல் போகிறபோது தான் நமக்கு மன அழுத்தம் உண்டாகிறது. எதிர்பார்ப்பெதுவுமின்றி, அதனை அடைய முயற்ச்சி செய்தால், நிச்சயம் வெற்றி அடைந்து மன அழுத்தமின்றி வாழலாம். மாலை வணக்கம்