முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
சத்திய சோதனை ( The Story of my Experiments with Truth ) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

அபாயம் இல்லை தொடு

அறிவியல் தொடர்பான விஷயங்களை எளிய நடையில், யாரையும் பயமுறுத்தாமல், விளக்கமாக எடுத்துச் சொல்கிற புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நிறைய அறிவியல் தமிழ் நூல்கள் வெளிவரவிருக்கின்றன. அந்த வரிசையில் முதன்முதலாஇப்போது வெளி வந்திருக்கிறது மின்சாரம் பற்றிய இந்தப் புத்தகம். நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட எத்தனையோ விஷயங்களில் ஒன்று மின்சாரம். ஆனால் அது பற்றி நமக்குத் தெரிகிற தகவல்களோ மிக மிக சொற்பம்தான்.

வ உ சி முற்போக்கு இயங்களின் முன்னோடி

தலைப்பு வ. உ. சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி ஆசிரியர் நா. வானமாமலை பதிப்பகம் மக்கள் வெளியீடு பதிப்பிடம் சென்னை பதிப்பு முதல் பதிப்பு பிப்ரவரி 1980 மறு அச்சு ஏப்ரல் 1999 மூலம் pdf பக்கங்கள் 54 கோப்பளவு 9.73 MB (பதிவிறக்குக) பகுப்பு எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் 👉இலவச பதிவிறக்கம் (Free Download)

பாரதியும் உலகமும் | பெ. தூரன்

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. 👉இலவச பதிவிறக்கம் (Free Download)

திருமலை திருப்பதி காலண்டர் 2020

  திருமலை திருப்பதி காலண்டர் 2020 👉இலவச பதிவிறக்கம் (Free Download)

அக்னிச் சிறகுகள் (அப்துல் கலாம்) ஒலிப்புத்தகம் - வைரமுத்து குரலில்

எழுத்தாளர் : Dr. A.P.J. Abdul Kalam வகை              :  சுயசரிதை குரல்                :  கவிஞர் வைரமுத்து அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இளமைக் காலம், உயர் படிப்பு, விமானம் தான் கனவு என்று இருந்து விதி வசத்தால் மாறி விஞ்ஞானி ஆனது மற்றும் அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வாழ்க்கை வரலாறாக தனது சக ஊழியர் அருண் திவாரி உதவியுடன் “அக்னிச் சிறகுகள்” என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.  

அப்துல் கலாம் ஒரு கனவின் வரலாறு

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ( அக்டோபர் 15 , 1931 - சூலை 27 , 2015 ) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.  
Advertisement