தோழனே!
விதி உன்னை புயலாய்
சூழ்ந்து வந்தாலும்,
புறத்தே நிற்க வைப்பாய்.
துன்பம் உன்னை மலையாய்
அடைத்து நின்றாலும்,
மலராய் குவிய வைப்பாய்.
போராடி பழகுவாய்,
இப்புவியே உனக்கு விளையாட்டுப் பந்தாக
மாற்றிடுவாய்.
முயற்ச்சித்து முன்னேறுவாய்,
சிகரமும் உனக்கு சிரம் தாழ்த்தி
நிற்பதை காண்பாய்.
ஒளி மங்கிக் கிடக்கும்
எதிர்காலத்தை,
நம்பிக்கை எனும் ஒளியால்
கலைத்திடுவாய்.
புதுயுகத்தின் பிரதிநிதியாய்
நீ வழிகாட்டுவாய் என்று,
உலகே உனக்காய் காத்திருக்கிறது
நீ வருவாய்!

கருத்துகள்
கருத்துரையிடுக