முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிச்சோலை

யோகா உயிரும் உடலும்  பேசும் மொழி நட்பு ஈடு இணையற்றது ஒப்பிட முடியாது விளக்க முடியாதது - எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியது. உயர்வு-தாழ்வு உயர்வும் தாழ்வும் உள்ளத்தில் தான் இருக்கிறது, உண்மையில் இல்லவே இல்லை. உண்மை உழைப்பு உண்மையும் உழைப்பும்  இருந்தால் உயர்வுக்கு பஞ்சமில்லை. காலச்சக்கரம் கடந்தகாலம் - நீ அதை கடந்துவிட்டாய் எதிர்காலம்    - அது குறித்து நிறைய கனவு கண்டாய் நிகழ்காலம்   - அதற்காக நீ என்ன செய்கிறாய்?

புது யுகம் படைப்பாய்

தோழனே! விதி உன்னை புயலாய் சூழ்ந்து வந்தாலும், புறத்தே நிற்க வைப்பாய். துன்பம் உன்னை மலையாய் அடைத்து நின்றாலும், மலராய் குவிய வைப்பாய். போராடி பழகுவாய், இப்புவியே உனக்கு விளையாட்டுப் பந்தாக மாற்றிடுவாய். முயற்ச்சி த்து முன்னேறுவாய், சிகரமும் உனக்கு சிரம் தாழ்த்தி நிற்பதை காண்பாய். ஒளி மங்கிக் கிடக்கும் எதிர்காலத்தை, நம்பிக்கை எனும் ஒளியால் கலைத்திடுவாய். புதுயுகத்தின் பிரதிநிதியாய் நீ வழிகாட்டுவாய் என்று, உலகே உனக்காய் காத்திருக்கிறது நீ வருவாய்!
Advertisement