“அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்? இந்தத் தொழில் என்னோடபோகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில் சேர்ந்து மாசம் மூவாயிரம் ரூபா நீ சம்பாதிச்சாகூட போமும்பா. விவசயத்தை நம்பி இனியும் பொழைக்க முடியாதுப்ப”
இதுதான் இன்றைக்கு ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் நாம் கேட்கும் டயலாக்.
வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற கதையாத்தான் ஆகிவிட்டது இன்றைய விவசயாயம். விதைகள், உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு எக்கச்சகம். இவ்வளவு கஷ்டப்பட்டு உற்பத்தி செய்தும் விளைபொருள்களுக்கு சரியானவிலை கிடைப்பதில்லை. தவிர, செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அளவுக்கதிமாகப் பயன்படுத்தியதால் நிலமும் பாழகிறது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு? செலவில்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? லாபம் சம்பாதிக்க முடியுமா?
முடியும். பல்லாயிரம் வருடப் படிழையான நம் விவசாயமுறை களையும் தொழில்நுட்பங்களையும் தவறவிட்டதன் விளைவுதான் நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் என்று ஆதாராபூர்வமாக அடித்துச் சொல்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயத்தில் மீண்டும் லாபம் சம்பாதிக்கும் அத்தனை வழிகளையும் சொல்லித் தருகிறார்.
இந்தப் புத்தகம் விவசாயம் பற்றி உங்களுக்கு இருக்கும் பல தவறான அபிப்ராயங்களை மாற்றும். புதிய தரிசனத்தைக் கொடுக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக