முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

*ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்... இறுதி வரை படிங்க*.......

*நம்ம ஊரில் ஒரு வரலாறு இருக்கு...*
பிரம்மனை சிறையில் அடைத்தான் *முப்பாட்டன் முருகன்*..
அப்புறம் அப்பனுக்கே பாடம் சொல்லிக் குடுத்தான் முருகன்..... என்று

ஏன் அப்படி செய்தார்??? என்றால்....
*ஓம் எனும் சொல்லுக்கு பொருள் சொல்லத்தான்.....*


நாமும் அதன் அர்த்தம் என்னனு தெரிஞ்சுக்கலாமே....

😇: ஓம் என்பது...
அ+உ+ம் என்பர்...

அஃதாவது,,,
அ - அரன் ( சிவம்)
உ - உமை அம்மை ( சத்தி)
ம் - முருகன் ( முத்தி)

😇: ஓங்காரத்தின் விளக்கங்கள் இணையத்திலேயே எக்கச்சக்கமாய் உள்ளது

😇: எல்லாமே ஆதியில் இருந்து வந்தவையாக இருக்குமா என்பதில் கேள்வி உண்டல்லவா...

😇: என் சிற்றறிவுக்கு எட்டிய வரை...

சிவமும் சத்தியும் பிரிக்க முடியாதவை

😇: சிவம் என்பது பருப்பொருள்...

😇: சத்தி என்பது ஆற்றல்...
( இரும்புச் சத்து,, புரதச் சத்து,,
என்று சொல்வது போல் பொதுவில் சத்தி எனலாம்)


😇: இதை என்றோ நாம் உணர்ந்து விட்டோம்...

பின்னாளில் Eienstien கூறினார் அல்லவா,,, *E=mc²* என்று...

அதே தான்

😇: சிவமாகிய பொருளில் மறைந்திருக்கும் சத்தியாகிய ஆற்றலைத் தேடும் வழியாக
இந்த *ஓம்* எனும் *ஓங்காரம்*
திகழ்கிறது


😇: இதன் வழியாக நாம் அடைய முற்படுவது முருகு எனும் *முத்தி*யைத் தான்

😇: *அ* எனும் எழுத்தை அகரம் என்கிறோம்

அது போல்...
*அகாரம்*

*உகாரம்*

*மகாரம்*

என்று....

*ஓங்காரம்* என ஒன்றிணைக்கிறோம்


😇: ஓம் எனும் ஒலியின் பயன்பாடு குமரிக் கண்டத்தின் புலவரான *மயன்* பாடிய நூல்களில் இருந்தே காணக்கிடைக்கின்றன

😇: உடலின் ஆற்றலை ஒருங்கிணைத்து,,,,,

முத்தியடைய வழி வகுக்கும் ஒற்றுமையின் விகுதி தான் ஓம்

😇: இதைத் தான் *தமிழ் இலக்கணமும்* சொல்கிறது

😇: *எ.கா.*:
செய்வோம் = செய்+ வ்+ *ஓம்*
தொழுவோம்=
                      தொழு+வ்+ *ஓம்*
தடுப்போம் = தடு+ ப்+ *ஓம்*


😇: இதைப் பிரணவம் என்று சமக்கிருதத்தில் கூறுவர்...
தமிழர் இலக்கணத்தின் விகுதியைத் தான் இந்து மதமும் இன்னும் சில மதங்களும் *ஓம்* ஒலியாக மந்திரத்திற்குப் பயன்படுத்துகின்றன...

😇:
 " *ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும், ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,                ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ* "

—(மயன் விஞ்ஞானம்)


😇: இந்த ஒலி அண்டத்திலும் உண்டு

😇: அணுவிலும் உண்டு

😇: பிற ஒலிகள் கேட்காதவாறு காதைப் பொத்திக் கொண்டால் கேட்கும் ஒலி ஓம் தான் என்பார் என் பாட்டனார்

இதில் இருக்கும் உகரத்தைத் தான் *உ*
என்று போட்டு எழுதத்துவங்குகிறோம்...

பிள்ளையார் சுழி என்று பெயர் அதற்கு...
(ஏன் இந்தப் பெயர் என்று தெரியவில்லை)

இன்றும் தெற்கில் உள்வர்கள்
*உ* என்று எழுதி பின்
*சிவமயம்*
என்று எழுதித் தான் எதையும் தொடங்குவர்...

😇: ஓம் எனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓம் எனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓம் எனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓம் எனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே...

............ திருமூலர்

கருத்துகள்

Advertisement