⚠ விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன், இன்று சொந்தங்களின் வீட்டிற்குச் செல்லக்கூட முன் அனுமதி கேட்கிறான்.
⚠ குடிக்க தண்ணீர் கேட்டவற்கு மோர் கொடுத்தவன், இன்று
புட்டியில் தண்ணீரை அடைத்து அதிக விலைக்கு
விற்கிறான்.
⚠ வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக் கட்டி வைத்தவன், இன்று வாழ்க்கைத் தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.

⚠ இயற்கை உணவுகளை உண்டு கம்பீரமாய் வலம் வந்தவன், இன்றுக் கண்ட உணவகங்களில் உண்டு வியாதியை விலைக்கு வாங்குகிறான்.
⚠ வாழை இலையிட்டு பந்தி முறையில் உணவளித்து வீட்டு விழாக்களை கொண்டாடியவன், இன்று சாலையோரங்களில் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு உண்கிறான்.
⚠ இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி மரியாதை தந்தவன், இன்று இடித்து தள்ளிவிட்டால் கூட மன்னிப்பு கேட்க நேரமில்லாமல் ஓடுகிறான்.
⚠ தமிழ் மொழியை தாயைப் போல நேசித்தவன், இன்று
தமிழில் பேசுவதை கவுரவக் குறைவாக நினைக்கிறான்.
⚠ ஆடை என்பது பண்பாடு & கலாச்சாரம் என்றவன், இன்று ஆடைக்குறைப்பை நாகரீக வளர்ச்சி என்கிறான்.
⚠ அப்படி ஒரு உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தனது முன்னோர்கள் என்ற வரலாறே தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்
இன்றையத் தமிழன்

கருத்துகள்
கருத்துரையிடுக