நீ ங்களோ... நானோ, ஒரு 10 நாள்கள் தமிழ் மொழி பேசாத ஒரு நகரத்தினுள் விடப் படுவதாக வைத்துக்கொள்வோம். நமக்கோ, தமிழ் -ஆங்கிலம் தவிர்த்து ஏதும் தெரியாது. அங்கு இருப்பவர்களுக்கோ தமிழும் ஆங்கிலமும் தெரியாது. இந்த நிலையில், நீங்கள் அந்த நகரத்தில்தான் 10 நாள்களைக் கழிக்க வேண்டுமெனில், உங்களின் மனநிலை எப்படித் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, இன்று நடக்கும் அரசுப் பணித் தேர்வில் நீங்கள் இந்தியில்தான் தேர்வெழுத வேண்டுமெனில், நீங்களோ... நானோ என்ன செய்திருப்போம்? வெறும் 10 நாள்களுக்கு மட்டுமல்ல, இனிவரும் நாளையெல்லாம் இந்தி மொழியோடுதான் கழிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டபோது, `பள்ளிப்படிப்பில் இனி, உங்களின் தாய் மொழி கூடாது; இந்தி மட்டுமே' என்று சொன்னபோது, இந்தி பேசாத அனைத்து இந்தியரும், ஒருகணம் இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாகவே நினைத்தனர். இந்தப் போராட்டமே ஜனவரி 25-ம் நாள் நினைவுகூரப்படும் மொழிப்போர் தியாகிகள் தினம்.
அமைதியும் ஆரோக்கியமும் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம். பிடித்தவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். சந்தேகங்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்